ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி வாசல் தெருவில் வசித்து வரும் ஹமிது சுல்தான் என்பவரது மனைவி ஃபரிதா (60). கணவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகே வாடகை வீடெடுத்து, விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம், ராஜா, மாரிஸ்வரன், ராஜேஸ்கண்ணன், கருப்புச்சாமி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம்புமாரி ஆகியோர் கலர் மீன்கள் விற்பனை செய்வதற்காக தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மூதாட்டி ஃபரிதாவிடம் தொழில் செய்வதற்காக அடிக்கடி கடன் வாங்கி திருப்பி கொடுத்துள்ளனர். இவ்வேளையில் 2012ஆம் அண்டு, செப்டம்பர் 4ஆம் தேதி அன்று கடன் வாங்கிய ரூ.50 ஆயிரத்தை திருப்பி கொடுக்கச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஃபரிதாவை கொலை செய்துவிட்டு, விட்டிலிருந்த ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 900 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
2019 Best Sports Moments: உலக ராபிட் செஸ் வென்ற இந்தியர், மாஸ் காட்டிய தமிழர்கள்!
கொலை செய்யப்பட்ட ஃபரிதாவை, இயற்கை மரணம் என நினைத்து உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்து புதைத்துவிட்டனர். கொள்ளையடித்த பணத்துடன் சாத்தூருக்குச் சென்றவர்கள் சில நாட்களுக்கு பின் மதுபோதையில் கொலை செய்ததை உளறியுள்ளனர்.
இதனையடுத்து ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏர்வாடி காவல் துறையினர் சம்வபத்தில் தொடர்புடைய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி பகவதியம்மாமள் இன்று வழங்கினார்.
அதில் அருணாச்சலம், ராஜா, மாரிஸ்வரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அவற்றைக் கட்டத் தவறினால், ஆறு மாத கால சிறை தண்டனை வழங்கியும் மற்ற மூவரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். வழக்கறிஞர் மனோ ரஞ்திதம் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதாடினார்.