ETV Bharat / state

அரசியல் கட்சிகளின் கொடி மரங்களை அகற்ற உத்தரவு

author img

By

Published : Feb 27, 2021, 10:42 PM IST

ராமநாதபுரம்: அரசியல் கட்சிகளின் கொடி மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 540 வாக்காளர்கள் உள்ளனர். 1,647 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதை தொடர்ந்து பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி கிடையாது. பிளக்ஸ் போர்டுகள் வைக்கவும் அனுமதி இல்லை.

ஏற்கனவே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளின் கொடி மரங்களை அகற்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியாயமான முறையில் தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 1,369 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,647 ஆக அதிகரித்துள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ள இடத்தில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: தொகுதிப் பங்கீடு: அதிமுக கூட்டணியில் பாஜக-விற்கு 22 தொகுதிகள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.