இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி, 58ஆவது குருபூஜை நிகழ்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.
தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு 144 உத்தரவின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், அமைப்புகள் ஐந்து நபருக்கு குறைவாக இருக்க வேண்டும். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி வாகனத்துடன் பெற வேண்டும்.
அரசு அறிவுறுத்தியுள்ள முகக்கவசம், தகுந்த இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து மரியாதை செலுத்த வேண்டும். விருப்பமுள்ள அரசியல் கட்சிகள், தலைவர்கள் அக்டோபர் 26ஆம் தேதிக்கு முன்பாக அனுமதி விண்ணப்பம் பெற வேண்டும்.
மரியாதை செலுத்த வரும் அனைவரும் அரசு தெரிவித்துள்ள வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முத்துராமலிங்க தேவர் குருபூஜை: அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவிப்பு! - முத்துராமலிங்க தேவரின் குருபூஜை
இராமநாதபுரம்: அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.