ராமநாதபுரத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பரிசோதனைகளை அரசு அதிகப்படுத்தியது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தமாக 1,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் கரோனா சிகிச்சை முடிந்து 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 953 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சாயல்குடியைச் சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மதுரையில் உயிரிழந்தார். அதேபோல், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆண் ஒருவரும், ராமநாதபுரம் காய்கறி மார்கெட் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும் என நேற்று (ஜூலை 7) ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட டயாலிஸிஸ் இளைஞர்..!