ETV Bharat / state

ராமநாதபுரத்தில் ஊரடங்குத் தளர்வுகள் என்னென்ன? - ஆட்சியர் விளக்கம்! - கரோனா தளர்வுகள்

ராமநாதபுரம்: ஜுன் 07 முதல் அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்குத் தளர்வுகளில் என்னென்ன கடைகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனா ஊரடங்கு தளர்வுகள்
கரோனா ஊரடங்கு
author img

By

Published : Jun 7, 2021, 7:34 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, ஜுன் 07 முதல் ஜுன் 14ஆம் தேதி காலை 6 மணிவரை தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், 'ராமநாதபுரத்திலுள்ள பவுண்ட் கடை ரோடு, வைசியர் வீதி, பாண்டிகண்மாய் சாலை ஆகியப் பகுதிகளில் உள்ள காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் தவிர, மீதமுள்ள பலசரக்கு கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இப்பகுதிகளில் சில்லறை விற்பனைக்கடைகள், நடைபாதைக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. அரண்மனைப் பகுதிகளிலுள்ள காய்கறிக் கடைகள் செயல்பட அனுமதியில்லை.

இப்பகுதிகளில் தனிமனித இடைவெளியினைப் பின்பற்ற முடியாத காரணத்தால், இங்கு செயல்படும் சிறு கடைகள், காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக் கடைகள் அனைத்தும் செயல்பட அனுமதியில்லை. ராஜா பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காய்கறிக் கடைகள், பழக்கடைகள் தொடர்ந்து செயல்படும். மேலும், பாரதி நகர் அம்மா பூங்கா பகுதியில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள் செயல்பட தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது .

மீன் மொத்த வியாபாரம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பரமக்குடி சின்னக்கடை வீதியில் தனிமனித இடைவெளியினை பின்பற்றி வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால், இப்பகுதியில் சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம் செய்ய அனுமதி இல்லை .

ஏற்கெனவே செயல்பட்டு வரும் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், எமனேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், விளையாட்டு மைதானங்களில் செயல்பட்டு வரும் காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும். முதுகுளத்தூர், கமுதி ஆகியப் பகுதிகளில் பேருந்து நிலையங்களில் காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும்.

சாயல்குடி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும். ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகேவுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட பயணிகள் தங்கும் இடத்தில் செயல்படும் காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து அதே இடத்தில் செயல்படும். மீன் மொத்தவியாபாரம் பழைய மார்க்கெட் சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல் டவர் அருகில் தொடர்ந்து செயல்படும் .

ஆர்.எஸ். மங்கலம், அபிராமம், பார்த்திபனூர் பகுதிகளில் ஏற்கெனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் காய்கறிக் கடைகள் , பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . தொண்டி பகுதிகளில் ஏற்கனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் காய்கறிக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . மீன் மொத்தவியாபாரம் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் செல்லும் வழியில் செயல்படும் .

கீழக்கரைப் பகுதியில் காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் நடமாடும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து செயல்படும். மீன் மொத்த வியாபாரம் கடற்கரையில் தொடர்ந்து செயல்படும். வணிக வளாகங்கள் இயங்க கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் வாரச்சந்தைகள் எங்கும் செயல்பட அனுமதியில்லை. கட்டுமானப் பொருள்கள், எலெக்ட்ரிக்கல் கடைகள், அடுமனை (Bakery ) செயல்பட அனுமதிக்கப்படுகிறது . மாவட்டம் முழுவதும் தேநீர் விற்பனைக் கடைகள் திறக்க அனுமதியில்லை. பேக்கரியில் இனிப்பு, காரம், ரொட்டி வகைகள் மட்டும் பார்சல் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அனைத்துக் கடைகளும் தனிமனித இடைவெளியினைப் பின்பற்றி செயல்பட வேண்டும். ஏற்கெனவே கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட உத்தரவுகள் தொடர்ந்து செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.