ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த அரோக்கிய நவீன் தனது குடும்பத்துடன் காரில் மதுரைக்கு சென்றுள்ளார்.
அப்போது, சேலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நோக்கி சென்ற வேன் ஒன்று பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த அரோக்கிய நவீன் கார் மீது மோதியது. இதில் காரில் பயணித்த ஆறு நபர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, சம்பவம் அறிந்து வந்த பரமக்குடி தீயணைப்பு வீரர்கள் காரின் கதவை உடைத்து காயமடைந்தவர்களை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி மற்றும் குழந்தை சடலங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கணவர்!