இரண்டு நாட்களாக கடலாடிப்பகுதியில் பெய்த மழையால் எம்.கரிசல்குளம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
பள்ளியின் முகப்பு தாழ்வான பகுதி என்பதால் அவ்வப்போது மழைநீரோடு சேர்ந்து கழிவு நீரும் முகப்புப் பகுதியில் தேங்கிவிடுகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாணவர்களின் பெற்றோர்கள் அச்சம்கொள்கின்றனர்.
இந்தச்சூழலில் கனமழையின் காரணமாக வகுப்பறைக்குள் புகுந்த மழைநீரால் உட்காருவதற்குக்கூட இடமில்லாமல் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளனார்கள். இதன் பின்பு பிளாஸ்டிக் டப்பாக்களைப் பயன்படுத்தி தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மழைக்காலம் என்பதால் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மழைநீர் வகுப்பறைக்குள்ளும் பள்ளி வளாகத்திற்குள்ளும் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா? பிரகாஷ் காரத்