தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் நேற்று (நவ. 17) மழை 742.90 மி.மீ் பதிவாகியுள்ளது. இதில் ராமநாதபுரத்தில் 18.50 மி.மீ மழையும் மண்டபத்தில் 5.00 மி.மீ மழையும் ஆர்எஸ் மங்கலம் பகுதியில் 90.00 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 131 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல திருவாடானை பகுதியில் 55.40 மி.மீ, கமுதியில் 58.40 மி.மீ, முதுகுளத்தூரில் 44 மி.மீ, வட்டாணம் பகுதியில் 70 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் குறைந்தபட்சமாக பாம்பனில் 4.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக நேற்று (நவ. 17) 742.90 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரத்தை பொறுத்தவரை சராசரி மழை பதிவு 46.43 மி.மீ உள்ளது. இதனால் விவசாயிகள் வேளாண் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.