ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தையும், தூக்கு பாலத்தையும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தையும் இன்று (பிப்ரவரி 21) தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். இவருடன், மதுரை மண்டல கோட்ட மேலாளர் லெனின், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மண்டல கோட்ட மேலாளர் லெனின், இந்தாண்டு இறுதியில் புதிய பாம்பன் பாலம் பணிகள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும், தற்போது 30 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள ரயில் பாலம் நல்ல உறுதித்தன்மையுடன் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பாலம் ஐஐடி தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நான்கு கர்டர்கள் மட்டும் ரயில் பாலத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாம்பன் பாலத்தில் மிதவை மோதி விபத்து: எந்தவித பாதிப்பும் இல்லை