தமிழ்நாடு முழுவதும் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற 599 நபர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத 64 நபர்கள், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 47 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 1, 555 வாகன ஓட்டிகளின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட ஒன்பது கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : 2 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை