இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் ஜெகதீஷ் குமார் . இவர் ஓரு தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பியுள்ள ஜெகதீஷ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை நகரின் முக்கிய பகுதியில் தேடி அலைந்துள்ளனா். அப்போது யாரும் எதிா்பாராத வகையில் ஜெகதீஷ் குமார் தலையில் தாக்கப்பட்டு பஸ் நிலையம் அருகில் உள்ள சந்தைக்கடை பகுதியில் இறந்துகிடந்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஜெகதீஷ்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமசுப்பிரமணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .