ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த மாணிக்கம்(48) ஆர் எஸ் மங்கலம் அருகே உள்ள காவணக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று ஆர் எஸ் மங்கலம் தொடக்க கல்வி அலுவலகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை போலீசார், மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், லாரியை ஓட்டிவந்த மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம்(42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.