ETV Bharat / state

தொடரும் மின் வெட்டு: அவதிப்படும் பொதுமக்கள்

ராமநாதபுரம்: உயர் மின் கோபுர இணைப்பு அறுந்து விழுந்ததில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் இல்லாமல் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

author img

By

Published : May 28, 2019, 1:53 PM IST

File pic

ராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதியில் இன்று (மே 28) அதிகாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது வரையிலும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் பணிக்கு செல்வோர், சிறு-குறு தொழிலாளர்கள், குழந்தைகள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஏற்கனவே மே 19ஆம் தேதி இதேபோல் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் இன்றும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதால் மின் வாரியம் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

தொடரும் மின் வெட்டு

இது தொடர்பாக மின் வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது ராமநாதபுரத்திற்கு வழுதூர், காவனூர் பகுதிகளில் இருந்துவரும் உயர் மின் கோபுரங்களின் வயர் அறுந்து விழுந்துள்ளது.

இதனால் ராமநாதபுரம் நகர் பகுதிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரமும் இதே பிரச்னை ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் தொடர்ந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் இருக்கும் நேரத்தில் மின் இணைப்பு இல்லாமல் வீட்டில் இருப்பது அனலில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மின் வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படாமல் இந்தப் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

Intro:இராமநாதபுரம்
மே.28
இரண்டாவது முறை அறுந்து விழுந்த உயர் மின் கோபுர இணைப்பு 9 மணி நேரங்களுக்கு மேலாக மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதி.

Body:இராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதியில் அதிகாலை 3 மணியில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது நன்பகல் 12 மணி கடந்த நிலையிலும் மின்சார விநியோகம் சீராகவில்லை. இதனால் பணிக்கு செல்வோர், நோன்பு வைத்திருக்கு இஸ்லாமியர்கள், சிறுகுறு தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 19 தேதி இதே போல் மின் விநியோக துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில் இன்று அப்படி ஒரு நிலை ஏற்பட்டு உள்ளதால் மக்கள் மின் வாரியம் மீது வெறுப்பை ஏற்படுத்து உள்ளது.

இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது இராமநாதபுரத்திற்க்கு வழுதூர், காவனூர் பகுதிகளில் இருந்து வரும் உயர் மின் கோபுரகளின் வயர் அறுந்து விழுந்ததால் இராமநாதபுரம் நகர் பகுதிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கடந்த வாரமும் இதே பிரச்சனையை சந்திதாகவும் அவர் கூறினார்.

மின் வாரிய ஊழியர்கள் தொடர்ந்து சீரமைக்கும் பணியை செய்து வருகின்றனர் என கூறினார்.

இருப்பினும் 7 மணி நேரம் 9 மணி நேரம் என இந்த அக்னி நட்சத்திரம் இருக்கும் நேரத்தில் மின் இணைப்பு இல்லாமல் வீட்டில் இருப்பதை அனலில் அருகே இருப்பது போல மக்கள் உணர்கின்றனர். ஆகையால் மின் வாரித ஊழியர்கள் அலட்சியமாக செயல்படாமல் நிரந்த தீர்வு காண மக்கள் வலியுறுத்தினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.