ராமநாதபுரத்தில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் வாகனங்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வண்ணங்களை அடித்து வருகின்றனர். அவ்வாறு வண்ணம் தீட்டப்படும் வாகனம் அடுத்த நான்கு நாள்களுக்கு வெளியில் செல்லக்கூடாது என்றும் அவ்வாறு வெளியில் வருவதை காவல்துறையினர் கண்டால் உடனடியாக வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இதுவரை ஆயிரத்து 349க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஆயிரத்து 724க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கரோனா வைரசின் தாக்கம் குறித்த விழிப்புணர்வின்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் தொடர்ந்து வாகனங்களில் சுற்றித்திரிவதை காவல்துறையினர் பல்வேறு விதங்களில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்!