ETV Bharat / state

காரில் கஞ்சா கடத்தல்: பெண் உள்பட ஐவர் கைது

சென்னையிலிருந்து காரில் கஞ்சா கடத்திவந்த பெண் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Oct 6, 2021, 12:17 PM IST

ராமநாதபுரம்: சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் கஞ்சா கடத்திவரப்படுவதாக, ராமநாதபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து கேணிக்கரை காவல் சார்பு ஆய்வாளர் குகனேஸ்வரன் தலைமையில் காவலர்கள் பட்டணம்காத்தான், ஈசிஆர், வல்லபை நகர் பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சென்னை பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 23 கிலோ கஞ்சா பண்டல் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ரஞ்சித் குமார் (31), ஹேமலதா (26), அஜய்குமார் (21), மாதவன் (20), மார்க் மைக்கேல் சாம்ராஜ் (22) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சென்னையிலிருந்து ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கஞ்சா கடத்திவந்து விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து காவல் துறையினர் காரில் இருந்த ஐந்து பேரை கைதுசெய்து நான்கு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சா பண்டல்கள், கார் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.