இன்றைய தலைமுறையினர் குறிப்பாக பதின் பருவத்தினர் தம்மிடம் அக்கறை காட்டும் பெற்றோரின் அறிவுரையை ஏற்காமல் கோபித்துக்கொள்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி குடும்பத்தினருடன் சண்டையிட்டு வெளியே வந்துள்ளார். பஜார் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுமி தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் விசாரணை நடத்தியபோது வீட்டில் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
![சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10713126_13_10713126_1613879943147.png)
இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சேவை மையம் (one stop) அச்சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தது. தொடர்ந்து சிறுமியை அவரது தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தார்கள். இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஆய்வாளருக்கு பாராட்டும் குவிகிறது.