ETV Bharat / state

இலங்கைக்கு 400 கிலோ மஞ்சள் கடத்த முயற்சியா?

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கடற்கரை அருகே, கரை ஒதுங்கிய 400 கிலோ மஞ்சள் இலங்கைக்கு கடத்த முயற்சியா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

author img

By

Published : Apr 4, 2021, 7:04 AM IST

400 கிலோ மஞ்சள்
400 கிலோ மஞ்சள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்குக் கடற்பகுதியில் சந்தேகப்படும் நிலையில், எட்டு மூட்டைகள் கரை ஒதுங்கிக் கிடப்பதாகச் சுங்கத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சனிக்கிழமை காலை அந்தப் பகுதிக்கு வந்த சுங்கத் துறையினர் கடலில் மிதந்த மூட்டையை மீட்டு சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த எட்டு மூட்டைகளில் தலா 50 கிலோ மஞ்சள் வீதம் 400 கிலோ இருந்தது.

முதற்கட்ட விசாரணையில் இந்த மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்குப் படகில் கடத்திச் செல்லப்பட்டபோது, கடலில் தவறிவிழுந்து மிதந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இதனைக் கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 'முகக்கவசத்தில் தங்க பேஸ்ட் மறைத்து நூதன கடத்தல் - ஒருவர் கைது!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.