ராமநாதபுரத்தில் கரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது நாள்தோறும் சுமார் 300 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
150 காவல் துறையினர் பாதிப்பு
மக்களை நாளும் நேரடியாகச் சந்திக்கும் முன்கள பணியாளர்களான காவல் துறையினர், மருத்துவர், செவிலியர்கள், தூய்மை பணியாளர், அரசு அலுவலர்கள் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூறியதாவது, 'இரண்டாவது அலையில் 150 காவல் துறையினர், காவல் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 120-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
![ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 150 காவல் துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:53:49:1622539429_tn-rmd-02-in-ramanathapuram-150-police-affects-covid-most-recovered-says-sp-pic-script-tn10040_01062021131758_0106f_1622533678_80.jpg)
இதற்கு மிக முக்கியக் காரணம் அவர்கள் இரண்டு தவணைக் கரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டது. மேலும், தற்போது 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர பாதிப்புக்கு ஆளான இருவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்' என தெரிவித்தார்.