ராமநாதபுரத்தில் இருந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் பொக்கனாரேந்தல். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறையினால் இக்கிராமம் தற்போது அதிகளவில் வறட்சியை சந்தித்துவருகிறது. கிராமத்து ஊரணியில் தற்போது நீரின் அளவு ஒரு ஆள் மட்டத்திற்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. இதனால் கால்நடைகள் அருந்த, குளிக்க போன்ற தேவைகள் பூர்த்தி செய்யமுடியாமல் அம்மக்கள் அல்லல்பட்டுவருகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் ஊருக்குள் இல்லாத காரணத்தால் இரண்டு கிலோ மீட்டர் சென்று தண்ணீரை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு வெங்கட்ரேந்தல் ஊரணி வறண்ட போது, கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை திரட்டி தூர்வாரி உள்ளனர். இந்தாண்டு ஊரணி, ஏரி உள்ளிட்டவற்றை அரசு தூர்வாரி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் முன்வைக்கின்றனர்.
மேலும் இந்த கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தைப் பிடிக்க இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளதாக அம்மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி பெரும்பான்மையான நேரங்களில் மின்சாரம் பாதியளவு மட்டுமே வருவதாகவும். இதனால் வீட்டில் பயன்படுத்தும் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து விடுவதாகவும். மேலும் முக்கிய தேவையாக கிராமத்தில் பொது கழிவறையை அரசு அமைத்து தரவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.