ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள பொட்டகவயல் பகுதியில் அரசு மேனிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 650 மாணவ - மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக ஒன்பது மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக பொட்டகவயல் மேனிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.
முற்றுகை
பெற்றோர்கள் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி பலமுறை மனு கொடுத்தும் அலுவலர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, மழைநீரை அகற்றும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் முழக்கமிட்டனர். விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் கூறியதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை