ETV Bharat / state

கரோனா பாதித்த பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற ஊராட்சி செயலாளர்! - Corona virus

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் அதிகமான பெண்ணை ஊராட்சி செயலாளர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காணொலி வைரலாகிவருகிறது.

கரோனா பாதிக்கப்பட்ட பெண்
கரோனா பாதிக்கப்பட்ட பெண்
author img

By

Published : Apr 27, 2021, 9:05 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி புனிதா தனது மூன்று குழந்தைகளோடு இங்கு வசித்துவருகிறார்.

இந்நிலையில் புனிதாவுக்கு கடந்த சில நாள்களாக சளி, காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்து, 24ஆம் தேதி மாலை கரோனா உறுதிசெய்யப்பட்டது.

அதன்பின் கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டிற்கு மருத்துவர், மருத்துவப் பணியாளர், பஞ்சாயத்து செயலாளர் ஆகியோர் பார்வையிடச் சென்றனர்.

அப்போது புனிதா மூச்சுவிட சிரமப்பட்டு மயங்கும் நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்கள் உடனடியாக அவரை ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை கொண்டுசெல்ல முடிவுசெய்தனர். எனவே அதற்காக அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு கால் செய்தனர்.

ஆனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால் சற்றும் யோசிக்காமல் ஊராட்சி செயலாளர் விமல் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் புனிதாவை அமரவைத்து மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்.

தற்போது அவர் சிகிச்சையில் இருந்துவருகிறார். ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராதபோதும் உயிருக்குப் போராடிய பெண்ணை துணிச்சலுடன் செயல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஊராட்சி செயலாளர் விமல், உதவியாளர் ஹரி பஞ்சாயத்துத் தலைவரின் மகனான கந்தகுமார் ஆகியோரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.