ETV Bharat / state

பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் கடல் நடுவே புதிய ரயில் பாலம் - பணிகள் தொடக்கம்!

ராமநாதபுரம் : பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில், கடல் நடுவே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.

பாம்பனில் பூமி பூஜையுடன் தொடக்கம்
author img

By

Published : Nov 8, 2019, 7:48 PM IST

ராமேஸ்வரத்தில் தீவையும், மண்டபம் நிலப்பகுதியும் இணைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது பாம்பன் ரயில் பாலம் தான். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்த பழைமையான பாலத்தில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு, அங்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மையப் பகுதியில் உள்ள தூக்குப் பாலம் பழைய முறையில் மேல் தூக்கி, கீழ் இறக்கும் வகையில் உள்ளது.

கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பாம்பனில் புதிய இரயில் பாலம் ரூ.250 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனையடுத்து, பாம்பன் கடலில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, கடந்த மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பின், பாம்பன் கடலில் உப்பு, காரத் தன்மை குறித்து 40 நாட்கள் கடலில் துளையிட்டு, மணல் சேகரித்து சென்னையில் பரிசோதனை செய்தனர்.

ரூ.250 கோடி மதிப்பில் கடல் நடுவே புதிய ரயில் பாலம்

இந்நிலையில், தற்போது உள்ள பாலத்தின் இடது புறத்தில் புதிய பாலம் கட்டும் பணி இன்று தொடங்கியது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் இப்பணியினை மேற்கொள்கிறது.

சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பாலத்தில் 99 தூண்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பூமி பூஜை பணிகள், இந்திய ரயில்வே ஆர்வி என்எல் திட்ட மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இப்பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெறும் எனவும் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல் செல்வதற்கு 27 மீட்டர் உயரத்திற்குத் தூக்கு பாலம் அமைய உள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம்' - அமைச்சர் ஜெயக்குமார்!

Intro:இராமநாதபுரம்
நவ.8

பாம்பனில் 250 கோடி மதிப்பில் கடல் நடுவே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் மேற்கு பகுதியில்
இன்று பாம்பன் தொடங்கியது.Body:இராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பகுதியும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் இரயில் பாலம், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 100 ஆண்டுகளை கடந்த பழைமையான பாலம் அடிக்கடி கடல் அரிப்பு காரணமாக இரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவது மையப் பகுதியில் உள்ள தூக்கு பாலம் பழய முறையில் மேல் தூக்கி கீழ் இறக்கும் வகையில் உள்ளது. கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பாம்பனில் புதிய இரயில் பாலம் 250 கோடி மதிப்பீட்டு அமைக்கப்படும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், பாம்பன் கடலில் 250 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. மார்ச் 1 ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பின் பாம்பன் கடலில் உப்பு, காரத் தன்மை குறித்து 40 நாட்கள் கடலில் துளையிட்டு மணல் சேகரித்து சென்னையில் பரிசோதனை செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று தற்போது உள்ள பாலத்தின் இடது புறம் புதிய பாலம் கட்டும் பணி இன்று துவங்கியது., குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ர்ஞ்சித் ப்ரிட்ஜ் கட்டுமான நிறுவனம் இப்பணியினை மேற்கொள்கின்றது.
சுமார் 2.345கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பாலத்தில் 99 தூண்கள் அமைக்கப்படுகின்றது. 60 அடிக்கு ஒரு தூண் அமைக்கப்படும் இந்த பூமி பூஜை பணி இந்திய ரயில்வேயின் ஆர்வி என் எல் திட்ட மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இன்று தொடங்கிய இப்பணி சுமார் 2 ஆண்டுகள் நடைபெறும் எனவும் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல் செல்ல 27 மீட்டர் உயரத்திற்கு தூக்கு பாலம் அமைய உள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.