ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் 14ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 ராமேஸ்வரம் மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளில் மீனவர்களை இலங்கை கடற்படை தனிமைப்படுத்திவைத்துள்ளனர்.
மீனவர்களின் வழக்கு இன்று யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜுட்சன், மீனவர்களை மீண்டும் மூன்றாவது முறையாக வருகின்ற 13ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி தங்கவைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி இலங்கை இந்திய உயர்மட்ட அலுவலர்களின் பேச்சுவார்த்தையில் மனிதாபிமான அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட மற்றும் படகு பழுதாகி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 16 பேர் உள்பட 40 மீனவர்களை விடுவிக்க உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
![மூன்றாவது முறையாக தனிமைப்படுத்தப்பட்ட மீனவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-03-srilanka-court-order-to-isolate-fishermen-10-more-days-pic-script-tn10040_04012021151830_0401f_1609753710_209.jpg)
இந்நிலையில், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். தொடர்ந்து, மீனவர்களின் காவலை மீண்டும் நீட்டித்த சம்பவம் உறவினர்கள், மீனவ அமைப்பினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுக்குச் செலவு, மக்களுக்கு லாபம்... வேறு எந்த மாற்றமும் நிகழாது - கமல்ஹாசன்