ETV Bharat / state

ரூ. 80 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே ரூ. 80 லட்சம் மதிப்பிலான கடல் அட்டையை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடல் அட்டை பறிமுதல்
கடல் அட்டை பறிமுதல்
author img

By

Published : Apr 11, 2021, 7:54 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகர் அருகே வில்லாயுதம் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் கடல் அட்டைகள் பதப்படுத்துவதாக மாவட்ட குற்றத்தடுப்பு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற அலுவலர்கள் தோப்பில் பல குவியலாகக் கிடந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், அவிக்க வைத்திருந்த பச்சகடல் அட்டைகளைக் கைப்பற்றினர்.

அதேநேரத்தில் மண்டபம் அருகே வேதாளை பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற சுமார் ஒரு டன் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை மூட்டைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. ராமேஸ்வரம் வேதாளை பகுதியில் சுமார் ரூ. 80 லட்சம் மதிப்பிலான 1 டன்‌‌ 600 கிலோ அட்டைகள் பறிமுதலான சம்பவத்தில் குற்றவாளி எவரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.