ETV Bharat / state

உச்சிப்புளி அருகே இருசக்கர வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு - Crime News

குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய நபர்களால், ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகன விபத்துஇருசக்கர வாகன விபத்து
இருசக்கர வாகன விபத்து
author img

By

Published : Aug 27, 2021, 6:44 AM IST

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே உள்ள மேற்கு சேர்வைக்காரர் ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நேற்று (ஆகஸ்ட் 26) தனது வீட்டிலிருந்து தாமரைக்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பெருங்குளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், களஞ்சியம் ஆகியோர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிவந்தனர்.

அவர்கள் ஓட்டிவந்த வாகனம் கண்ணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். மேலும் மோகன்ராஜ், களஞ்சியம் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தொழிலதிபர் கடத்தல் : 12 மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.