ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,647 வாக்குச்சாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் அலுவலர்கள் சீல்வைத்தனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக ஏழு மணிக்கு நிறைவடைந்தது. மாவட்டத்தில் 1,817 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்துமுடிந்தது. கோட்டூர் மலை வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக இரண்டு பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு இந்திரங்கள் தர்மபுரி செட்டிகரை பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் அலுவலர்கள் சீல்வைத்தனர். விருதுநகரில் தோராயமாக 72.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப் பகுதிகளான நாயுடுபுரம், மூஞ்சிக்கல், பாம்பார்புரம் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறால் சில மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. மலைக்கிராமங்களில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு இடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் 73 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் அலுவலர்கள் சீல்வைத்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் தொடர்பான குளறுபடிகள் எதுவும் நடைபெறவில்லை.
மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இந்திரங்கள் அதற்கான பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டு பின்னர் வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: 81.59 விழுக்காடுக்கும் அதிமாக வாக்குகள் பதிவானது!