ராமநாதபுரம் பாரதி நகர் அருகே நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கண் இளங்கோவன் தலைமையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மக்களுக்கு விரோதமான புதிய கல்விக்கொள்கையில் குழந்தைகளின் வேலைவாய்ப்பு திறனை வளர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் குலத் தொழிலை கட்டாயப்படுத்தி அதன் மூலம் குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதே சமயம் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் பின்தங்கிய வடமாநிலத்தில் புதியதாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டின் பழைய பாடத் திட்டங்கள் என்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.