தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் ராமேஸ்வரத்தில் நேற்று (பிப். 06) நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், 2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை மக்களுக்கு அல்வா வழங்கியது போல இருந்ததாக விமர்சித்தார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சுண்டெலிகள் மட்டுமே மாட்டி உள்ளதாகவும், பெருச்சாளிகள் தப்பித்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டிய அவர், இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ரஜினி ஒரு நல்ல திரைக்கலைஞர், இயக்குநர்கள் எழுதிக் கொடுக்கும் வசனத்தை நல்ல முறையில் பேசி நடித்தார், தற்போது பாஜக கூறுவதை பேசி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முத்தரசன், 5, 8ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெற்றோம் என்றார்.
இதையும் படிங்க: தேசிய கொடிகளை தீவைத்து எரித்த அரசு ஊழியர்