ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயதான முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கூடுதல் கவனம்
தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவருக்குத் திடீரென்று கண்கள் சிவந்த நிலையில் வீக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை நடைபெற்றுவருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருந்துவருகின்றனர்.
சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.