ETV Bharat / state

ராமநாதபுரத்தில் நடமாடும் வாகனங்கள்: கிலோவிற்கு ரூ.50 கூடுதல் விலையில் காய்கறி விற்பனை - ramanathapuram latest news

ராமநாதபுரம் : தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் காய்கறி வண்டிகள் கிலோவிற்கு ரூ.50 கூடுதல் விலை வைத்து, விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரத்தில் நடமாடும் வாகனங்கள் கிலோவிற்கு ரூ.50 கூடுதல் விலையில் காய்கறி விற்பனை

author img

By

Published : May 25, 2021, 6:16 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று (மே.25) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், நாட்டு மருந்துக்கடைகள் உள்பட சில வணிக நிறுவனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசியத் தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியன நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் வீட்டுக்கே சென்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தமாக 969 காய்கறிகள், பழங்கள் விற்கும் நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது 525 நடமாடும் வாகனங்கள் காய்கறி, பழங்கள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றும்(மே.24), இன்றும் (மே.25) சேர்த்து சுமார் 169 மெட்ரிக் டன் காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலமாக விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் 6.2 டன் பழவகைகளும் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் காய்கறி, பழங்களின் விலை கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.70 கூடுதல் விலையில் நடமாடும் வாகனங்களால் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : நாளை முதல் ட்விட்டர், பேஸ்புக் முடக்கமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.