பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி மற்றும் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “விடுதலைப் போராட்ட வீரரான தேவர் பெருமகனார் ஜெயந்தி தினமான இன்று, பசும்பொன் வந்து அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது மகிழ்வளிக்கிறது!
தமிழ்ப்பற்று, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமைக்காகப் பாடுபட்ட அவர் காட்டிய பொதுவாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க தேவர்ஜெயந்தியில் உறுதியேற்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...ஆளுநர் தாமதத்தால் 7.5% இடஒதுக்கீடு அரசாணை! - முதலமைச்சர் விளக்கம்