ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு 2021-22ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.
இதற்காக அந்த மருத்துவமனையில் இன்று (அக்.1) டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் சாந்தாராம் தலைமையில் பேராசிரியர்கள் ராஜவேல், முருகன், நிர்மல்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, இதர வசதிகள் குறித்து டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை அனுப்பினர்.
இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்த பிறகு, மத்திய குழு ஆய்வு செய்து 2021-22ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலைமை மருத்துவருக்கு கரோனா - அரசு மருத்துவமனை மூடல்!