ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகரிக்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி தர்மலிங்கம்(48). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்மலிங்கம் மீது பாலியல் வன்கொடுமை, போக்ஸோ சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி டி. பகவதியம்மாள் இன்று தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தர்மலிங்கத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - 11 பேராசிரியர்களிடம் விசாரணை