ராமநாதபுரம்: பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது கல்லெறிந்து வழிப்பறி நடைபெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த காணொலி காவல் துறையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், அந்த சாலையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர்.
உடனே அந்த காணொலியை வெளியிட்ட மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவரை அழைத்து அறிவுரை வழங்கினர். இதையடுத்து அவர் தான் தவறாக காணொலி வெளியிட்டதாக விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுபோதை தலைக்கேறி அஞ்சலகத்தில் தூங்கும் அஞ்சலக ஊழியர்