ETV Bharat / state

திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டம் சட்டத்திற்கு விரோதமானது: எல். முருகன் - Ramanathapuram district news

இராமநாதபுரம்: திமுக தலைவர் முக ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் நடத்துவது சட்டத்திற்கு விரோதமானது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கிராம சபை கூட்டம் சட்டத்திற்கு விரோதமானது

author img

By

Published : Jan 9, 2021, 6:53 AM IST

இராமநாதபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விரைவில் கட்சி தலைமை அறிவிக்கும். திமுக தலைவர் முக ஸ்டாலின் காலை எழுந்து இரவு வரை எதிலாவது அரசியல் செய்ய வேண்டும் என அலைகிறார்.
மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி பிரதிகளும் இருக்கும் போதே முக ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் நடத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

திமுகவின் கிராம சபைக் கூட்டம் சட்டத்திற்கு விரோதமானது

இப்படி கிராம சபைக் கூட்டம் நடத்துவது சட்டத்திற்கு விரோதமானது. கிராம சபைக் கூட்டம் மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துள்ளது.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் முக ஸ்டாலின் தோல்வியைத்தான் சந்திப்பார். கிராம சபைக் கூட்டத்தில் பெண்ணை தாக்கியுள்ளனர். சமூகநீதிப் பற்றியும் பெண்ணுரிமை பற்றியும் பேசுவார்கள். ஆனால் செயலில் இருக்காது.

கனிமொழி எங்கும் பெண்கள் மீதான குற்றங்கள் பற்றி பேசுவார். ஆனால் அவர் கட்சி எம்எல்ஏ பூங்கோதைக்கு நடந்த சம்பவம் பற்றி பேசவே இல்லை" என்றார்.

இதையும் படிங்க: பாஜக இல்லையென்றால் தமிழ்நாட்டில் அரசியலே இல்லை: எல். முருகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.