கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் வரும் பிப்ரவரி 26,27ஆம் தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.
இந்த முடிவானது, இந்திய துணை தூதரக அலுவலர், நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதிக்கு உட்பட்ட 150 பேரை திருப்பணிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.