ETV Bharat / bharat

சமூக ஊடகங்களில் ஆபாச கன்டென்ட்; சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - VULGAR CONTENT ON SOCIAL MEDIA

சமூக ஊடகங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (கோப்புப்படம்)
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 3:23 PM IST

புதுடெல்லி: சமூக வலைத்தளங்கள் கட்டுப்பாடற்றவையாக மாறியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றசாட்டு வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தில் பாஜக எம்பி கோவில், சமூக ஊடக தளங்களில் ஒளிபரப்பாகும் ஆபாச மற்றும் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களைச் சரிபார்க்க தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என கோரினார்.

அப்போது அதற்கு பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பத்திரிகை சுதந்திரத்திற்கான தளமாக இருந்து வரும் சமூக ஊடகங்கள் கட்டுப்பாடற்ற தளமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: 'வாய்ப்பே இல்லை'.. யார் சிஎம் விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்..! முட்டி மோதும் சிவசேனா...

மோசமான உள்ளடக்கத்தை கொண்ட விஷயங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன. முன்பெல்லாம் தலையங்க சரிபார்ப்புகள் இருந்தன. ஒரு விஷயத்தை வெளியிடும் முன்பு அதில் உள்ள குறைகள் சரி பார்க்கப்படும். ஆனால், அதுபோன்ற சோதனைகள் இப்போதில்லை. சட்ட விரோதமாக சமூக ஊடக தளங்களில் ஒளிபரப்பாகும் ஆபாச மற்றும் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களைச் சரிபார்க்க தற்போதுள்ள வழிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

கட்டுப்பாடற்று கிடக்கும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டத்தை கடுமையாக்குவது அவசியமாகும். நாடாளுமன்ற நிலைக்குழு இந்தப் பிரச்சினையை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.