ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் (ஏப்ரல் 13) நடிகரும் முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் இருதயத்திற்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்த குழாய் வெடிப்பு காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா நகரில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களுக்கு உதவ வேண்டும் என்னும் கொண்ட மனிதர் இறந்துள்ளார். ஏற்கனவே இருதயத்தில் பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு இருந்த அவர், தற்போது தேர்தல் பரப்புரைக்காக சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்றைய தினம் ரத்தக் குழாய் வெடிப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் நடிகர்கள் சின்னிஜெயந்த் மற்றும் மனோபாலா தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.
அப்போது மனோபாலா கூறுகையில், நல்ல மனிதரை தமிழ் சினிமாவும் தமிழ்நாடும் இழந்திருப்பதாகவும், அனைத்து கலைஞருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.