டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்டு ராமநாதபுரம் திரும்பிய 35 பேருக்கு கரோனோ கண்டறிதல் சோதனைசெய்யப்பட்டது. அதில் பரமக்குடியைச் சேர்ந்த முதியவர்கள் இருவருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அவர்கள் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 16ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அதையடுத்து அவர் கடந்த 3ஆம் தேதி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து உயிரிழந்தவரின் மனைவி, மகன், பரமக்குடியைச் சேர்ந்த அவரது கார் ஓட்டுநர் மூன்று பேருக்கும் கடந்த 14ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கும் ஏப்ரல் 16ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 17) மண்டபம், பரமக்குடி, ஆர்.எஸ். மங்கலம் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எட்டு பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா சோதனை முடிவு வருவதற்கு முன்பு உயிரிழந்த 72 வயது முதியவர்!