ETV Bharat / state

ராமநாதபுரத்தில் மழை வேண்டி கோயிலில் யாகம் - இந்துசமய அறநிலையத்துறை

ராமநாதபுரம்: கடும் வறட்சியை போக்குவதற்காகவும், தற்போது நிலவிவரும் கடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டி, சேது மாதவ கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் யாகம் நடத்தப்பட்டது.

இராமநாதபுரத்தில் மழை வேண்டி கோயிலில் யாகம்
author img

By

Published : May 9, 2019, 2:22 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குத் தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால் பல கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது, மக்கள் குடிநீர் தேவைக்காக பல கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கடும் வறட்சியை போக்குவதற்காக, இந்துசமய அறநிலையத் துறைக்கு கீழ் செயல்பட்டுவரும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்ற அரசு உத்தரவின்படி, இன்று ராமநாதபுரத்தில் உள்ள சேது மாதவ கோயிலில், வேதம் முழங்க வருண ஜபம், வேள்வி யாகம் நடத்தப்பட்டு, பின் புனித நீரை கோயிலின் கிணற்றிலும் நந்தி பகவானுக்கும் ஊற்றப்பட்டது. இந்த பூஜையின்போது சிவாச்சாரியார்கள் திருக்கோவில் ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

On Wed, May 8, 2019, 8:10 PM THANGADURAI K <thangadurai.k@etvbharat.com> wrote:
இராமநாதபுரம்
மே.8
மழை வேண்டி இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு யாகம். 

   கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குத் தென்மேற்குப் பருவ மழை தமிழகத்துக்கு நீரை அளிக்கவில்லை. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பல கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாகவும், இதனால் குடிநீர் தேவைக்காக பல கிமீ தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உருவாகியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    இந்த நிலையில் கடும் வறட்சியைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மழை வேண்டி இந்து சமய அறநிலையத் துறை கீழ் செயல்பட்டு வரும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல் உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டிருந்தது.அதன் அடிப்படையில்
 இன்று.இராமநாதபுரம் மாவட்டம்  இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் உள்ள சேது மாதவ கோவிலில்
 சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வருண ஜபம, வேள்வி  யாகம் நடத்தப்பட்டு பின் புண்ணிய தீர்த்ததை சேது மாதவ தீர்த்த கிணற்றில் ஊற்றி இராமநாதசுவாமிக்கும் பர்வதவர்தனி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின் புனித நீரை நந்தி பகவானுக்கு ஊற்றப்பட்டது.
இந்த பூஜையின் போது சிவாச்சாரியார்கள் திருக்கோவில் ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.