ராமநாதபுரம் பேருந்து நிலையம் எதிரே அமைந்திருக்கிறது ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம். இந்த அலுவலக வளாகத்திற்குள் ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள் சிதறியும் அங்குள்ள குப்பைத் தொட்டி அருகே 100க்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்கள் அட்டைப்பெட்டிகளில் குவிந்து கிடந்தன.
இந்நிலையில் இன்று வேறு ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் இந்த தகவலைத் தெரிவித்தவுடன் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அரசு அலுவலக வளாகத்தை மதுக்கடை பார் போலப் பராமரித்து வரும் ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.