ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் கரையைக் கடப்பதால் கடந்த நான்கு நாள்களாக மழை பெய்துவருகிறது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த வெங்கலக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்பவரது வீடு இன்று (டிச. 04) எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.
இதற்கிடையில் வீடு விரிசல்விடும் சத்தம் கேட்டு பஞ்சவர்ணமும், அவரது குழந்தைகள் மூன்று பேரும் வீட்டைவிட்டு வெளியேறியதால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் அருகிலுள்ள சில வீடுகள் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவ்வீடுகளில் வசிக்கும் 13 நபர்களையும், வெங்கலக்குறிச்சி கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீடு இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சவர்ணம் குடும்பத்திற்கு அரசு சார்பாக முதுகுளத்தூர் வட்டாட்சியர் நிதி உதவியும் அரிசி, வேறு உபயோகப் பொருள்களையும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புரெவி புயல் எதிரொலி: ராமேஸ்வரத்தில் கனமழை