ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள பிள்ளையார்குளம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு தர்கா கட்டி அரக்காசு அம்மன் என்ற பெயரில் ஆண்டுதோறும் கந்தூரி விழா எடுத்து வழிபடுகிறார்கள். அக்கிராம மக்கள் இது குறித்து கூறும்போது, "100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமணமாகாத அரக்காசு என்ற இஸ்லாமிய பெண் இக்கிராமத்திற்கு வந்துள்ளார்.
அந்தப் பெண் உயிரோடு கிராமத்தில் அடக்கமாகியுள்ளார். அடக்கமான அந்த இடத்தில் தர்கா அமைத்து வழிபட்டுவருகிறோம். கடந்த மூன்று தலைமுறைகளாக புரட்டாசி மாதம் இந்த தர்காவில் விழா எடுத்துக் கொண்டாடிவருகிறோம்.
இந்த விழாவிற்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து ஏராளமான இஸ்லாமியர்களும் வருகைதருகிறார்கள். வருபவர்கள் அனைவரும் இந்து முறைப்படி பூப்போட்டு தர்காவில் வழிபட்டுச் செல்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட நாகூர் தர்கா: இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி