ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், உத்திரகோசமங்கை உள்ளிட்ட பல முக்கிய ஆலயங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன. சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதாவது கோயில் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு அந்த நிலங்களை சொந்தமாக விற்க, அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் இந்து முன்னணியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து இந்து முன்னணியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி கூறும்போது, 'இந்துக்கள் ஆலயத்திற்காக தானமாக, பூஜைக்காக, திருவிழாவிற்காக கொடுக்கப்பட்டது நிலம். இதை அவர்களுக்கே கொடுப்பது என்பது சட்டவிரோதமானது. ஏற்கனவே இந்து ஆணை சட்டத்தின்படி எந்த ஒரு உரிமை மாற்றம்கூட செய்யக்கூடாது என்ற நிலையில் அரசாங்கமே இதை செய்திருக்கிறது. இது நில ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதாக உள்ளது' எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'அரசு கொண்டு வந்துள்ள கோயில் நில ஆக்கிரமிப்பு, அவர்களுக்கே சொந்தம் என்ற அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்' என்று கூறினார்.
இதையும் படிங்க:
ராமநாதபுரத்திலுள்ள நகைக்கடையில் என்ஐஏ அலுவலர்கள் திடீர் சோதனை!