ETV Bharat / state

அதிகரிக்கும் மயக்கம் தரக்கூடிய மாத்திரைகளின் விற்பனை - எச்சரிக்கும் காவல் துறை - Hike in the sale of sedative pills, police warns the medical shops not to sell sedative pills without proper prescription slips

ராமநாதபுரம்: மயக்க நிலையை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்துள்ளார்.

இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார்

author img

By

Published : Apr 29, 2020, 1:33 AM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் செயல்பட்டு வந்த அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மது போதைக்கு அடிமையான சிலர், போதைக்காக பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒரு தரப்பினர் மயக்க நிலையை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளான டைடால், டையஷிம்பாம், மான்ட்ராக்ஸ் உள்ளிட்டவற்றை போதைக்காகப் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, கேணிக்கரை காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. புகார்கள் குறித்து பேசிய அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், “ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்து கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்படும் மருந்து சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மருந்து, மாத்திரைகள் இனி விநியோகம் செய்ய வேண்டும்.

பொதுமக்கள் யாரேனும் மயக்க நிலைக்கு தள்ளக்கூடிய மருந்துகளைக் கேட்டால், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தர வேண்டாம். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைப்பேசி எண்ணான 9489919722 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த மாத்திரைகளை லாப நோக்கோடு மருந்து கடைகள் விநியோகம் செய்வது தெரியவந்தால், கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாது, கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது” என்றார்.

இதையும் படிங்க: 'இல்லாதவங்களுக்கு உதவுங்க சாமி...!' - குடிசைகளின் குரல்களுக்கு செவிசாய்க்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.