ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கனமழை: வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு! - Heavy rain in Ramanathapuram

ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் அருகருகே இருந்த மூன்று ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 11, 2021, 10:55 AM IST

ராமநாதபுரத்தில் இன்று (ஜன. 11) அதிகாலை, 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5 மணியளவில், எம்ஜிஆர் நகரை அருகே உள்ள மூன்று ஓட்டு வீடுகள் பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்து விபத்துகுள்ளானது.

இந்த விபத்தில் டிரம் செட் வாசிக்கும் சண்முகம் என்பவர் தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவி சங்கீதாவை தள்ளிவிட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

கனமழை இடிந்து விழுந்த வீடுகள்

அதுபோல மூர்த்தி என்பவர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் மற்ற இரண்டு வீடுகளில் இருந்தவர்கள் சத்தம் கேட்டவுடன் உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். கர்ப்பிணி மனைவியைக் காப்பாற்றி உயிரிழந்த கணவர் நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திடீரென வெடித்த செல்போன் பேட்டரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.