ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 1 மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழை! - ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டிணம்காத்தான்,பாரதி நகர் பகுதியில் மழை

ராமநாதபுரம்: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ram
ram
author img

By

Published : Sep 30, 2020, 6:44 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ராமேஸ்வரம், பாம்பன், கமுதி, பரமக்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

கடந்த மூன்று நாள்களில் மாவட்டம் முழுவதும் சுமார் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பரமக்குடியில் 5 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இன்று, ராமநாதபுரம் நகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1 மணி நேரத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டினம்காத்தான், பாரதி நகர் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.