தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டு வரும் துப்பாக்கிகளை, அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் உரிய அனுமதியோடு பயன்படுத்தப்பட்டு வரும் 166 துப்பாக்கிகளில், 136 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மேலும் மீதமுள்ள 30 துப்பாக்கிகள் வங்கி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.