ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள வாணிய வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா, சரண்யா தம்பதியினர். கடந்த 2014ஆம் ஆண்டு இவர்களுக்கு உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் 500 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. தற்போது நான்கரை வயதாகும் அந்த குழந்தையின் பெயர் மகா ஸ்ரீ.
அவரது தாத்தா போஸ் என்பவரின் பராமரிப்பில் வாழும் அந்தக் குழந்தையால் தன்னிச்சையாக எந்த செயலையும் செய்ய முடியாது. மேலும் குழந்தைக்கு பார்வை குறைபாடும் இருப்பதால் கடந்த ஓராண்டுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊனமுற்றோருக்கான அலுவலகத்தில் அடையாள அட்டை பதிவு செய்து சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகள் வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தையின் தாத்தாவான போஸ், தன்னுடைய பேத்திக்கு மருத்துவ உதவி வேண்டியும் மக்கள் நல்வாழ்வு துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனது பேத்திக்கு ஊனமுற்றோருக்கான உதவித்தொகை வழங்கவும், மருத்துவ உதவி கேட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மனுவை விசாரித்த ஆட்சியர் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படியுங்க:
113 வயதில் மிட்டாய் தாத்தாவிற்கு கிடைத்த முதியோர் உதவித்தொகை!