ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகேவுள்ள மறவாய்க்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (65). இவரது மனைவியின் மூத்த சகோதரர் ராமசாமி. இவர்கள் இருவருக்கும் இடையே பலநாள்களாக இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஜுன் 16) மாலையும் இவர்களுக்குள் மீண்டும் இடப் பிரச்னை குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராமசாமி, அவரது மனைவி ஆயிர வள்ளி, மகள் ஜெகதீஸ்வரி, மருமகன் வினோத் ஆகியோர் சேர்ந்து ராமநாதனை செங்கற்களால் சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் நெஞ்சில் பலத்த காயமடைந்த ராமநாதனை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையிலிருந்த ராமநாதன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராமசாமி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் கூலித் தொழிலாளர்களிடையே தகராறு : ஒருவர் உயிரிழப்பு